சென்னை, இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. சிறிய கிராமம் முதல் பெருநகரம் வரை, தெருக்கள் முதல் சர்வதேச மைதானங்கள் வரை எங்கும் கிரிக்கெட்டின் தாக்கத்தை காண முடியும். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, ஏமாற்றம் என ஒவ்வொரு தருணத்தையும் இந்திய ரசிகர்கள் தங்களது குடும்ப நிகழ்வைப் போலவே உணர்ந்து கொண்டாடுகிறார்கள். அதனால் தான் கிரிக்கெட் இந்தியர்களின் உணர்வுபூர்வமான விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. 1932-ஆம் ஆண்டு இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. பின்னர் 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகள் இந்திய கிரிக்கெட்டை உலக அரங்கில் உயர்த்தின. கிரிக்கெட் கிரிக்கெட் உலகில் தற்போது மூன்று முக்கியமான போட்டி வடிவங்கள் உள்ளன. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான முறைகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட்டின் பழமையான மற்றும் பாரம்பரிய வடிவம் டெஸ்ட் போட்டி. அதிகபட்சம் 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், வீரர்களின் பொறுமை, நுட்பம் மற்றும் நீண்ட நேர விளையாடும் திறன் சோதிக்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் ஒரு அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட இந்த வடிவம் ஒரே நாளில் முடிவடையும். கிரிக்கெட் உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்கள் பெரும்பாலும் ஒருநாள் வடிவில் நடத்தப்பட்டுள்ளன. டி20 கிரிக்கெட் கிரிக்கெட்டின் அதிவேக வடிவமான டி20 போட்டியில், ஒரு அணிக்கு 20 ஓவர்கள் மட்டுமே வழங்கப்படும். அதிரடி பேட்டிங், விறுவிறுப்பான ஆட்டம் மற்றும் குறுகிய நேரத்தில் முடிவு கிடைப்பது இதன் சிறப்பு. தலைமுறைகளை இணைக்கும் விளையாட்டு தாத்தா, பாட்டி முதல் சிறுவர்கள் வரை அனைவரும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். குடும்பமே ஒன்றாக அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. எளிதில் விளையாடக்கூடிய விளையாட்டு கிரிக்கெட் விளையாட பெரிய மைதானம் அல்லது விலையுயர்ந்த உபகரணங்கள் அவசியமில்லை. ஒரு பேட், ஒரு பந்து இருந்தாலே தெருக்களிலும், பள்ளி வளாகங்களிலும், கிராமங்களிலும் விளையாட முடியும். ஜாம்பவான் வீரர்களின் தாக்கம் கபில் தேவ், சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ். தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, போன்ற வீரர்கள் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர். அவர்களின் சாதனைகள் கிரிக்கெட் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளன. தொழில்துறை கிரிக்கெட் இன்று இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொழில்துறையாக வளர்ந்துள்ளது. ஒளிபரப்பு உரிமைகள், விளம்பரங்கள், அனுசரணை நிறுவனங்கள், டிக்கெட் விற்பனை, விளையாட்டு உபகரணங்கள் என பல துறைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால் கிரிக்கெட் இந்திய பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஐபிஎல் ஏற்படுத்திய புரட்சி ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டை மேலும் பிரபலமாக்கியது. இந்திய மற்றும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் ஒன்றாக விளையாடுவதால் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு உயர்ந்தது. உணர்வுகளோடு கலந்த ரசிகர் ஆதரவு இந்தியாவில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்; தோல்வியடைந்தால் வருத்தப்படுகிறார்கள். இதுவே கிரிக்கெட் ஒரு விளையாட்டைத் தாண்டி உணர்வுகளோடு கலந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/indiyargalin-unarvupoorva-vilayattu-cricket-kaaranaam-enna




