மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் முறிவு தொடர்பாக இருக்கிறது என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணலில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் மனம் திறந்து பேசியிருக்கிறார். அனுபமா அவரின் பேட்டியில், ``அந்தப் பழைய உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் நான் கடுமையான மன ரீதியான கொடுமைகளுக்கு (Narcissistic Abuse) ஆளானேன். அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களும் உள்ளன. முழுமையாகக் குணமடைந்த பிறகே அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். இது தன்னைத்தானே கண்டறிந்து மீண்டு வந்த ஒரு பெண்ணின் பயணம். நான் காதலித்த நபர் ஒரு நேரம் ரெமோவாக அளவுக்கடந்த காதலை வழங்குவார். அடுத்த நாள் அந்நியனாக கொடூரமாக நடந்துகொள்வார். அதற்கு அடுத்த நாள் அம்பியாக மாறி மன்னிப்பு கேட்டு, அப்பாவியாக மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார். நடிகை மடோனா செபாஸ்டியன் மன ரீதியான கொடுமைகள் குறித்துப் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்த பிறகே, நான் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இருந்தோம் என்பதை உணர்ந்து நடுங்கினேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். Wamiqa Gabbi: "எனக்கு ஒரு காலத்தில் தைரியம் கொடுத்த அந்த தேவதை!" - பகிரும் நடிகை ஜீவா சுப்ரமணியம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/actress-anupama-parameswaran-has-given-an-interview-about-her-past-relationship




