சென்னை, மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி விவரத்தை பொதுமக்கள் தங்கள் கைப்பட எழுத வேண்டும் என்று ஒத்திகை பணியில் புதிய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்படும். அதன்படி 2021-ல் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா கார ணமாக எடுக்கப்படவில்லை. அதன்படி இந்த கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு (2027) எடுக்கப்படுகிறது. அதிலும் இந்த கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பாகவும் இருக்க போகிறது. திறந்த பத்தி இந்த கணக்கெடுப்பு பணிக்கான ஒத்திகை பணிகள் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கி உள்ளது. 20-ந் தேதி வரை இந்த பணி நடக்கிறது. இந்த ஒத்திகை பணியின்போது கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் ஒரு வினாத்தாள் தருகின்றனர். அதில் பொதுமக்கள் தங்களது சாதி பெயரை நேரடியாக தங்கள் கைப்பட எழுதி கொள்ளலாம். அதற்காக அதில் 'திறந்த பத்தி' சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின் மூலம் கிடைக்கும் கள அனுபவங்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே இறுதி வினாத்தாள் வடிவமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் முறை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையான டிஜிட்டல் முறையில் நடக்க உள்ளது. சுதந்திர இந்தியாவில் முழுமையாக சாதி விவரங்களை முழுமையாகப் பதிவு செய்யும் முதல் கணக்கெடுப்பாகவும். இதுவரை நடந்த கணக்கெடுப்புகளில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் விவரங்கள் மட்டுமே தனியாக பதிவு செய்யப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கணக்கெடுப்பில் அனைத்து சமூகங்களின் சாதி விவரங்களும் உள்ளடக்கப்பட உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-procedures-for-recording-caste-details-in-the-census




