கோவை: கோவை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களை 3 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.500 அபராதம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. புகார் இதனை ஏற்க மறுக்கும் சிலர், பார்க்கிங் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஒரு சிலர் ஊழியர்களை தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் தகராறு செய்வதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பார்க்கிங் விதிகளை பின்பற்றி, ஊழியர்களுடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/parking-at-coimbatore-airport-for-more-than-3-minutes-will-result-in-a-fine-of-rs-500




