திருப்பதி, திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வேத மந்திர ஓதல்கள், சைவ ஆகம முறைப்படி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட புனித திரவியங்களால் சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலையில் கலச பூஜை, ஹோமம் மற்றும் பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவித்ர மாலைகள் தொடர்ந்து பவித்ரோற்சவத்தின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) கிராந்தி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், நாளை (செவ்வாய்க்கிழமை) மகா பூர்ணாஹுதி நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. கோவிலில் தினந்தோறும் நடைபெறும் பூஜைகள் மற்றும் திருவிழா காலங்களின்போது நடக்கும் பூஜைகளில் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்படுகின்ற தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக ஆகம விதிகளின்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/pavithrotsavam-at-tirupati-kapileswarar-temple




