திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன வீதிஉலா முன்னால் பக்தர்கள் குழுவினர் பக்தி பஜனை பாடல்களை பாடினர். கேரள செண்டை மேளம், மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கின. வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதினர். கேலரிகளில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர். சூரியநாராயணராக. சூரியன் அனைத்து உயிரினங்களுக்கும் ஆரோக்கியத்தையும், உயிர் சக்தியையும் வழங்கும் தெய்வீக சக்தியின் அடையாளமாக விளங்குகிறார். இதனால் சூரியனை பக்தர்கள் சூரியநாராயணராக வழிபடுகின்றனர். சூரிய மண்டலத்தின் மத்தியில் ஸ்ரீமன்நாராயணர் வீற்றிருக்கிறார் என்ற ஆன்மிக நம்பிக்கையின் அடையாளமாக சூரியபிரபை வாகன சேவை விளங்குகிறது. சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமியை தரிசிப்பதன் மூலம் ஆயுள், ஆரோக்கியம், சுகம், சந்தோஷம், செல்வ வளம் மற்றும் நல்ல சந்தானப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இத்தகைய சிறப்புகளை உணர்த்தவே மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். சந்திர பிரபை வாகன வீதிஉலா தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொட்டும் மழையில் சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/tirupati-brahmotsavam-procession-of-lord-malayappa-swamy-on-surya-and-chandra-prabha-vahanams




