சென்னையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. மிகக் குறைந்த அளவிலேயே வீடுகளில் பிரசவம் பார்க்கப்படும் சூழல் உள்ளது. இந்திய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. இருப்பினும், அதை மேலும் குறைப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் 65.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 51 சதவீதமாகக் குறைந்துள்ளது. ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைகளை நாடும் போது அவர்களுக்கான செலவு அதிகரிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் 'தாய்மாமன் தங்க மோதிரம்' போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிரசவ விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படுவது, முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கப்பட்டது போன்ற காரணங்கள் முதற்கட்டமாகச் சொல்லப்பட்டாலும், போதிய உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி, அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு தம்பதியினருக்கான சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 2.1 ஆக இருந்தால்தான் தற்போதைய மக்கள் தொகை நிலைத்திருக்கும். ஆனால், ஆய்வுகளின்படி தமிழ்நாட்டில் இந்த விகிதம் 1.4-க்கும் கீழே குறைந்துவிட்டது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 16 சதவீதமாக உயர்ந்து, மாநில மக்கள் தொகை முதுமையடையும் நிலையை நோக்கிச் செல்கிறது. இது வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய பொது சுகாதார சவாலாக மாறக்கூடும். பிறப்பு விகிதத்தைச் சீராகப் பேணவும், மனித வளத்தைப் பெருக்கவும் தேவையான கொள்கை அளவிலான முடிவுகள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும். முதல்வர் விஜய் ஒரு ஆட்சியில் கொண்டு வரப்படும் நல்ல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது அரசின் கொள்கை சார்ந்த தொடர்ச்சியாகும். நீதிக்கட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இடஒழுக்கீடு மற்றும் காமராஜர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டங்கள் அடுத்தடுத்த அரசுகளால் தொடரப்படுகிறது. பெயர் மாற்றத்தை விட அத்திட்டங்கள் ஊழலற்ற முறையில், தரம் குறையாமல் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதே முக்கியம். தமிழ்நாட்டில் MBBS தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, கலந்தாய்வுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றதால், அரசுக்கான இடஒழுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இடஒழுக்கீடு பாதிக்கப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசப்படும். இருப்பினும், தற்போதைய அரசின் தீவிர முயற்சியால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) ஆய்வுகளுக்குப் பின், மூன்று அரசு மருத்துவமனைகளில் தலா 50 இடங்கள் வீதம் இந்த ஆண்டு புதிதாக 150 MBBS இடங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளன. அருண் ராஜ் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் 4.5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்களைச் சேகரிக்க மீண்டும் ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும்." "திமுக அரசுக்குப் போட்டியாக தவெக அரசும் துரோகம் செய்திருக்கிறது" - மின் இணைப்பு குறித்து அன்புமணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/minister-arunraj-met-reporters-in-chennai




