திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயரில் திட்டங்களை தவெக அரசு அறிவிப்பதாகவும், வெறும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,. திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். "ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான்; ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன" என்றார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிதி ஆதாரத்தை பெருக்க அதிமுகவும், திமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். தமிழக நிதி நிலமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.மின்சாரம், போக்குவர்த்து கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில்தான் இவர்கள் விட்டு சென்று இருக்கிறார்கள். புதிய ஆதாரத்திற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் என்ன செய்தார். எடப்பாடி எதுவும் செய்யவில்லை. ஸ்டாலினும் எதுவும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் விஜய் இதை சீரமைக்கும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். சிறப்பாக இருக்கும் விவசாய கடன் விவகாரத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.விவசாய கடன்கள் 75 ஆயிரம் ரூபாய் வரை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இருக்கிற நிதி நிலையில், இருக்கிற ஆதாரங்களை வைத்து எவ்வளவு தூரம் மக்களுக்கு பயன் அளிக்க முடியுமோ அதை முதல் அமைச்சர் செய்துள்ளார். கண்டிப்பாக வரும் காலங்களில் மக்களுக்கான அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். ஆட்சேபமான கருத்துகள் தங்க மோதிரம். தாலிக்கு தங்க திட்டம் எல்லாம் இருக்கட்டும், இவை எல்லாம் நல்ல திட்டம். ஏழை பெண்களுக்கு பயன் அளிக்க கூடிய திட்டம். அதை மீண்டும் செயல்படுத்தி இருக்கிறோம். முதல் அமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேவையில்லாமல் இருந்தால் நீக்குவேன் என்று தான் சொன்னார். சபாநாயகர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆட்சேபமான கருத்துகள் இருந்தால் நீக்குகிறேன் என்று சொன்னார். ஆட்சேபமான கருத்துகள் எதுவும் இல்லை. அமைச்சர் வினோத் பேசியதில் தவறும் எதுவும் இல்லை. திட்டங்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறோம். உரிமைகளை மீட்க எல்லா வழிகளையும் செய்வோம்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/have-stickers-been-pasted-over-schemes-from-previous-governments-minister-nirmal-kumar




