மெக்சிகோ சிட்டி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை பேராடி வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து - மெக்சிகோ 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை மெக்சிகோ சிட்டியில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் பாதி விறுவிறுப்பான இந்த மோதலில் வலுவான இரு அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் அடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியன. அப்போது ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 38-வது நிமிடத்தில் மீண்டும் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய மெக்சிகோ, இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போது ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஜுலியன் கினோனெஸ் கோல் அடித்து முன்னிலையை குறைத்தார். இதனால் முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. 2-ம் பாதி இதையடுத்து துவங்கிய 2-வது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அற்புதமாக பயன்படுத்திய ஹாரி கேன் தனது முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு மெக்சிகோ அணி உடனடியாக பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் ரவுல் ஜிமெனெஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் 1 கோல் மட்டுமே இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சியில் ஈடுபட ஆட்டம் சூடு பிடித்தது. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதை கோலாக மாற்றமுடிவவில்லை. 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து 3-2 என முனிலையில் இருந்தது. இதன் பின் கூடுதலாக 11 நிமிடங்கள் வழங்கப்பட்டன. சமனிலை கோலுக்காக மெக்சிகோவும் 4-வது கோலுக்காக இங்கிலாந்தும் கடுமையாக போராடின. இருப்பினும் எந்த கோலும் பதிவாகவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-england-defeats-mexico-and-qualifies-for-the-quarter-finals




