சென்னை, "ஒருநாள் அணியின் இருந்து ரோகித், விராட்டை யாராலும் நீக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அஸ்வின் ஆதரவு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "விராட் கோலியும் ரோகித் சர்மாவும் விளையாட விரும்பும் வரை அவர்களை யாராலும் இந்திய அணியிலிருந்து நீக்க முடியாது. அதற்கு காரணம் அவர்கள் படைத்திருக்கும் அசாதாரண சாதனைகள்தான். அவர்களுக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களை பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர்களை அணியில் இருந்து நீக்குவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும்" என்று கூறினார். யாருக்கு நிரூபிக்க வேண்டும்? மேலும் பேசிய அஸ்வின், "ரோகித் சர்மா இனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் யாருக்கு என்ன நிரூபிக்க வேண்டும்? அடுத்த உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற பசி மட்டுமே தற்போது அவரை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/they-cannot-touch-virat-rohit-if-they-want-to-play-ashwin-backs-senior-stars-for-2027-wc




