ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் சாலையோர கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் பாய்ந்த கார் அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நடந்தது. சுமார் 22 அடி ஆழமுள்ள சாலையோர கிணற்றில் கார் பாய்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாலவந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர், சித்திப்பேட்டையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. நள்ளிரவில் கார் கண்டுபிடிப்பு விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில் கிணற்றுக்குள் கார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காரை கிணற்றில் இருந்து மீட்டனர். காருக்குள் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/telangana-car-plunges-into-well-4-members-of-the-same-family-killed




