நாகர்கோவில், வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மது குடிக்கும் பழக்கம் இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், காயங்களுடன் மீட்கப்பட்டவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ரெனால்டு (வயது 38) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ரெனால்டுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ரெனால்டுவிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ரெனால்டு, சம்பவத்தன்று ரெயில் முன்பாய்ந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரெனால்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/addicted-to-alcohol-watchman-takes-drastic-step-in-anguish-over-wife-leaving-him




