எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதும் ரசிகர்கள் கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய், ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். இந்த நிலையில், கடந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்றது. பரபரப்பை கிளப்பிய போஸ்டர் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் தங்களது ‘தல’யும் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வந்தனர். வருகின்றனர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை விஜய் தொடக்கி வைத்தார். அப்போது இருவரும் கட்டியணைத்து கைகளை உயர்த்தி ‘போஸ்’ கொடுத்தனர். இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் அஜித் ரசிகர் மன்றத்தினர் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற கட்சியையும், இரண்டாவது கட்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் ’அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர். வரும் 2031-ம் ஆண்டுக்குள் அஜித்தை முதல்வராக்குவதே இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் லண்டனில் விஜய்-அஜித் இருவரும் போஸ் கொடுத்த படத்தைப் போட்டு அதில், `இடைத்தேர்தல் வெற்றி; இணைந்த கைகள் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர். அஜித் - விஜய் இது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த போஸ்டர்கள் குறித்து தூத்துக்குடி சண்முகபுரம் லக்கி ஸ்டார் அஜித் நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில். அதன் தலைவர் மாடசாமி, `நடிகர் அஜித் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பெயரையோ, ரசிகர்களையோ எந்தவொரு அரசியல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தல அவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பின்னணியில் ‘இடைத்தேர்தல் வெற்றி’ போன்ற வாசகங்களுடன் தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர், அஜித் ரசிகர்கள் மத்தியில் மன வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அஜித் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருப்பதாக அறிவிக்கவில்லை. தூத்துக்குடி அஜித் நற்பணி மன்றத்தின் அறிக்கை இந்த நிலையில், அவரது புகைப்படம் மற்றும் ரசிகர்களின் உணர்வுகளை அரசியல் பிரசாரத்துடன் தொடர்புபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அஜித் அவர்களின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும், அரசியல் சார்பற்ற நிலைப்பாட்டை உணர்ந்து மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/thoothukudi-vijay-ajith-poster-sparks-a-stir




