சென்னை, தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் புறப்பட்டு சென்றனர். காரால் ஏற்பட்ட குழப்பம் சட்டமன்ற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து விட்டு, அங்கு நின்ற இனோவா காரில் ஏற முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடையது என்று தெரிவித்தனர். உடனே சிரித்துக்கொண்டு காரில் ஏறுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். அதன்பிறகு, அவருடைய காரில் புறப்பட்டு சென்றார். மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் காரும், உதயநிதி ஸ்டாலினின் காரும் ஒரே நிறத்தில் உள்ளதால், கடந்த 2022-ம் ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி, வெளியே வந்து காரில் ஏற முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சார் இது உங்கள் கார் இல்லை என்று தெரிவித்தனர். அவரும் ஓ. சாரி என்று சிரித்துக் கொண்டே தனது காரை நோக்கி நடந்து சென்றார். தற்போது, அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/edappadi-palaniswami-moves-to-get-into-udhayanidhi-stalins-car-an-interesting-incident-at-the-assembly-complex-2




