சென்னை, த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணைய உள்ளதாகவும், சவுமியா அன்புமணி அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. த.வெ.க. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை. இதனால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. (107 இடங்கள்) கூட்டணி ஆட்சி அமைத்தது. த.வெ.க.வுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. மேலும் 4 இடங்கள் இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்றாலும் அக்கட்சிக்கு சட்டசபையில் பலம் 109 ஆகத்தான் உயரும். அப்படியானால், இடைத்தேர்தலுக்கு காத்திருக்கும் 5 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறுவதுடன் மேலும் 4 இடங்கள் அவசியம் தேவைப்படுகிறது. ஏற்கனவே, ஆட்சிக்கு ஆதரவு அளித்த இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.வெ.க. கூட்டணியில் இல்லை என்று அறிவித்துவிட்டன. இடைத்தேர்தலையும் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தனியாக சந்திப்பதால், எந்த நேரத்திலும் த.வெ.க. அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இப்படி கடும் நெருக்கடிக்கு மத்தியில் த.வெ.க. சிக்கித் தவிக்கும் நிலையில், அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (4) ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தற்போது தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசில், காங்கிரஸ் - வி.சி.க.,- இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., பக்கம் சாய்ந்ததால், அந்த கட்சி த.வெ.க.,விற்கு ஆதரவு மட்டுமே வழங்கி வருகிறது. முன்னர் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் எல்லாம் இணைந்து, த.வெ.க., தலைமையில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியை உருவாக்கி உள்ளன. அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. அதற்குள் கூட்டணியை பலப்படுத்த, த.வெ.க., தலைமை விரும்புகிறது. மேலும், அரசுக்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்க ரகசிய பேச்சு நடத்தப்பட்டது. பின்னடைவு பா.ம.க. தலைவர் அன்புமணியின் மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான சவுமியாவிற்கு, அமைச்சர் பதவியை வழங்க, முதல்-அமைச்சர் விஜய் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அது வதந்தி என சவுமியா கூறி வருகிறார். அமைச்சர்கள் கருத்து தெரிவிக்காமல் மழுப்பி வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவது குறித்த தகவல் வேகமாகப் பரவி வருகிறது. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள வி.சி.க., தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்தால், அமைச்சரவையில் இருந்து வெளியேறி விடுவோம் என வி.சி.க. பொதுச்செயலர் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் கூறி வருகின்றனர். இதனால் கூட்டணியை பலப்படுத்தும் த.வெ.க.வின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/persisting-hurdles-in-the-pmk-joining-the-tvk-alliance




