தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மார்க்கண்டேயனை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோரை சந்திக்க விடாமல் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தியது காவல்துறை. அதன் காரணமாக காவல்துறையினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கீதா ஜீவன் கீதா ஜீவன் கூறுகையில், ``எம்.எல்.ஏ மார்கண்டேயனை பார்க்கவிடாமல் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கையில் ஒரு அலைபேசி கூட வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும் அவருடைய உதவியாளரை பார்க்க அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரை பார்க்க அனுமதிக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க இதுவரை அனுமதிக்கவில்லை. அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது அவருக்கு உடல் நிலையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. போலீஸாரிடம் கேட்டால், மேலே இருந்து உத்தரவு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித நோட்டீஸும் வழங்காமல் எவ்வாறு கைது செய்ய முடியும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம். அனிதா ராதாகிருஷ்ணன் சட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். தமிழக வெற்றிகழக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்க கூட இல்லை இந்த அளவுக்கு ஒடுக்குமுறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார். அனிதா ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சட்டமன்ற உறுப்பினர் அவர் மனதில் பட்டதைத்தான் பேசினார். சட்டமன்றத்தில் சரியான பதிலடி நடக்கும் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது? என்னிடம் ரூரல் டி.எஸ்.பி சுதீர் என்பவரும் அவருடன் சபாரி போட்டு வந்த ஒருத்தர் என்னை பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டினார். தி.மு.க.,வினரை எந்த காரணம் கொண்டும் அடக்க முடியாது தொட்டு பார்க்க முடியாது என்று கூறிவிட்டேன். மார்க்கண்டேயன் மனைவி எங்களிடம் தகவல் அளித்தார். `எனது கணவரை கூட்டி சென்று இருக்கிறார்கள் அவர் உடல்நிலை சரியில்லை முதுவலியில் உள்ளது' என்று கூறினார். இந்த ஆட்சி நான்கு மாதம் தான் இவர்கள் ஆட்டம் நான்கு மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் பாராளுமன்றம் இப்பொழுது கூடியுள்ளது. அதனால் இந்த நாட்களில் இதற்கு முடிவு தெரிந்து விடும்." என்றார். ``எலும்புகள் எல்லோருக்கும் உண்டு" - திமுக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/it-was-thoothukudi-rural-dsp-sudhir-who-threatened-me-to-join-the-tvk-anitha-radhakrishnan



