புதுடெல்லி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2026, ஏப்.30-ம் தேதி நிலவரப்படி ரூ.5,451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இன்னும் பலர் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்கலாம் என்றும் அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு அதற்குரிய தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறப்பட்டாலும், தற்போதும் செல்லத்தக்க ஒன்று என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/do-you-have-rs-2000-note-important-announcement-issued-by-the-reserve-bank




