திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் இணைந்து போதை இல்லா கிராமம் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். “போதை இல்லா கிராமம்” மாரத்தான் போட்டி திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் ஆண், பெண், பொதுமக்கள் பங்கேற்ற “போதை இல்லா கிராமம்” மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. 6 கிலோமீட்டர் இந்த மாரத்தான் போட்டியானது தருவை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் சுத்தமல்லி விலக்கு வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. கலெக்டர், எஸ்.பி. தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் இணைந்து மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி.யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இந்த நிகழ்ச்சியில் பேசிய திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தருவை கிராமத்தை “போதை இல்லா கிராமம்” என அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் 1,060 பேர் கலந்து கொண்டனர். இதில் 600 ஆண்கள், 400 பெண்கள் மற்றும் 60 போலீசார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம் “போதைப்பொருளை தவிர்ப்போம் - ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-village-marathon-in-nellai-thousands-participate




