சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புழல், காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங்கை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூர்ணிமாவுக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து சரவணனின் மனைவி சரண்யாவுடன் ரத்தினவேல் பாண்டியனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தெரிந்த சரவணன், மனைவி சரண்யாவையும் ரத்தினவேல் பாண்டியனையும் கண்டித்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து பழகிவந்தனர். கொலை இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தன்னுடைய உறவினரான எண்ணூரைச் சேர்ந்த பழனிசாமியிடம் ரத்தினவேல் பாண்டியனை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து செங்குன்றம் அலமாதி சாலையில் ரத்தினவேல் பாண்டியன் இன்று (19.8.2026) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் ரத்தினவேல் பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை குறித்து செங்குன்றம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இது குறித்து செங்குன்றம் போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனுக்கும் அவரின் உறவினரான சரவணனுக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து ரத்தினவேல் பாண்டியன் எங்கு செல்கிறார் என்பதை சரவணன் ரகசியமாக கண்காணித்து வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் இன்று (19.8.2026) ரத்தினவேல் பாண்டியன் தனியாக பைக்கில் அலமாதி சாலையில் செல்லும் தகவல் சரவணனுக்கு கிடைத்திருக்கிறது. உடனடியாக சரவணன், தன்னுடைய சித்தப்பா பழனிசாமியை பைக்கில் அழைத்துக் கொண்டு ரத்தினவேல் பாண்டியனை பின்தொடர்ந்திருக்கிறார். அதன் பிறகுதான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. கைது இந்தக் கொலை வழக்கில் சரவணன், பழனிசாமி மற்றும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் சரவணனின் தம்பி தனசேகர் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை வளையத்திலிருக்கும் சரவணன், பர்மாவிலிருந்து துணிகளை வாங்கி வந்து சென்னையில் விற்று வருகிறார். விசாரணையில் சரவணன், தன்னுடைய தங்கை, மனைவி ஆகியோருக்காக இந்தக் கொலையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. கொலைக்குப் பயன்படுத்திய கத்திகள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/electrician-murdered-in-chennai-police-arrested-three



