சென்னை, எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை இந்தியாவின் சிறந்த நகரமாக மாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில் பஸ், ரெயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்கள் தற்சமயம் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்டிரல் வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட திட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாதவரம் தொடங்கி சிறுசேரி சிப்காட் வரையும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை இந்நிலையில் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' (நீர்வழிப் போக்குவரத்து) திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாக தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/from-ennore-to-mamallapuram-push-to-implement-the-water-metro-project-in-chennai




