சென்னை, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 118.1 கி.மீ தொலைவிற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் மக்களின் பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது. பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் இந்த வழித்தடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் நிபந்தனையுடனான ஒப்புதலை பெற்றது. மே மாதத்தில் மெட்ரோ நிறுவனம் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததை தொடர்ந்து, ரெயில்களை இயக்குவதற்கான இறுதி அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. முன்னதாக, இந்த வழித்தடம் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இது 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. தேர்தல்கள் மற்றும் புதிய அரசு பதவியேற்பு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் புதிய அரசு பதவியேற்பு போன்ற அரசியல் சூழல்களால் இந்த தொடக்கம் தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. தற்போது ரெயில்களை இயக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், தொடக்க தேதிக்காக காத்திருப்பதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 11 ரெயில் நிலையங்களுடன் ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும், அதன் பின்னர் கூடுதலாக 6 ரெயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamallee-vadapalani-metro-rail-prime-minister-modi-to-inaugurate-on-october-11




