சென்னை, தமிழகத்தில் கால்நடை தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கால்நடை தீவன உற்பத்தி தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடை தீவன உற்பத்தியில் அரிசி தவிடு, மக்காச்சோளம், சோயா, மொலாசஸ் உள்ளிட்டவை முக்கிய மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் அரிசி தவிடு விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு டன் ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலை ரூ.26 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. ஒதுக்கீடு தமிழக அரசிடம் அரிசி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், புதிதாக நெல்லை அரைப்பதற்கான ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அரிசி தவிடுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர, வறட்சி காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு மக்காச்சோளம் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் 40 சதவீதம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் மக்காச்சோளத்தின் விலையும் குறையாமல் தொடர்ந்து உயர்ந்த நிலையில் உள்ளது. வெள்ளைச்சோளம் மேலும், போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் வெள்ளைச்சோளம் சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடை தீவன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் வரத்து குறைந்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மூலப்பொருட்களின் விலை உயர்வும், மறுபுறம் அவற்றின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் கால்நடை தீவன உற்பத்தி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/animal-feed-production-affected-by-high-bran-prices




