பொள்ளாச்சி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் "WE THE LEADERS" அமைப்பின் முதல் மாநாடு "போதையில்லா தமிழகம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு நாளை (ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்காக பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலையில் ஆட்சி பட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது மாநாட்டு பந்தல், மேடை, இருக்கைகள் அமைக்கும் பணிகள் மற்றும் வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவுவாயிலில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-awareness-conference-to-be-held-in-pollachi-in-full-swing




