சென்னை, டிஎன்பிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 171 ரன்கள் குவிப்பு அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 12.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டநிலையில், பின்னர் ஆட்டம் 16 ஓவர்களாக குறிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கோவை அபார வெற்றி இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த திண்டுக்கல் அணி, கோவை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நிரங்கர் சர்மா 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ‘ரிட்டையர்ட் அவுட்’ ஆனார். இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-covai-kings-beat-dindigul-by-85-runs




