சென்னை, மாநிலம் முழுவதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 4-ந் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை ஜூலை 31-ந் தேதி நிலவரப்படி, 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவடைய இருந்த நிலையில், எந்தக் குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக சேர்க்கை காலத்தை நீட்டிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் 31-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/student-enrollment-in-government-primary-schools-extended-until-august-31




