கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற அந்தச் சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்தச் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை காதலித்ததும், அதில் கர்ப்பமானதால் அவரை குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அதனால் ரவீந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார். குழந்தை திருமணம் அதேபோல விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 28 வயதான ராஜா என்பவர் சிறுமியை காதலிப்பதாகக் கூற, அதற்கு அவரும் சம்மதித்திருக்கிறார். அதையடுத்து சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதனால் ராஜா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார். அதேபோல, காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் செல்போனுக்கு, கடந்த ஆண்டு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதை எடுத்த அந்தச் சிறுமி, `ராங் கால்' என்று கூறியிருக்கிறார். அப்போது எதிர்முனையில் இருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், `உங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. அழகா பேசறீங்க.' என்று கூறியிருக்கிறார். அதையடுத்து இருவரும் வாட்ஸ்-அப் மூலம் பேசி காதலித்து வந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் திருமணத்துக்கு தன்னுடைய பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் சிறுமி. அதற்கு, அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் ஆகாஷ். போக்சோ சிறுமியும் அதற்கு ஒப்புக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் உள்ள ஆகாஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் சிறுமியை, கடந்த மாதம் அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார் ஆகாஷ். ஆனால் அதன்பிறகு சிறுமியிடம் பேசாமல் மாயமானார் ஆகாஷ். அவரது செல்போன் எண்ணும் `ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டதால், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் சிறுமியின் பெற்றோர். அதையடுத்து குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஆகாஷ் மீது போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் ரவீந்திரன், ராஜா, ஆகாஷ் மூவரையும் தேடி வருகிறது கடலூர் மாவட்ட காவல்துறை. விழுப்புரம்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி முதல்வர் போக்சோ வழக்கில் கைது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/in-cuddalorepocso-act-against-3-youths-who-married-and-impregnated-minor-girls




