சென்னை, வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் ‘தர்மதுரை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் சீனு ராமசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தர்மதுரை’. விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், சிருஷ்டி டாங்கே, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். தேசிய விருது வென்ற பாடல் ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘எந்தப் பக்கம்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 64-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 23-ல் ரீ-ரிலீஸ் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் ‘தர்மதுரை’ திரைப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், வருகிற அக்டோபர் 23-ம் தேதி ‘தர்மதுரை’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. இதேவேளையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படமும் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dharmadurai-returns-to-the-big-screen-release-date-announced




