சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,06,500 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 2-வது நாளாக மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-again-todays-status




