சென்னை, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்த சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா, இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்த மாதந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 27-ந்தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சுற்றறிக்கை இதையடுத்து, உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று கடந்த 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதில், 'கம்யூனிஸ்டுகள் மற்றும் கரப்பான் பூச்சி கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் இதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுப்பது குறித்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் பா.சிந்தியா செல்வி கடந்த 17-ந்தேதி சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த சுற்றறிக்கையை 19-ந்தேதி உயர்கல்வித்துறை திரும்ப பெற்றது. நோட்டீஸ் இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கல்லூரிக் கல்வி ஆணையர் பா.பொன்னையா, இணை இயக்குனர் சிந்தியா செல்விக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவிலேயே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் மிகவும் முக்கியமான கடிதம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தக் கூடிய கடிதமானது கல்லூரிக் கல்வி ஆணையரின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி கல்வி ஆணையர் வழியாக அல்லாமல் தங்கள் அளவில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக தங்களது விளக்கத்தினை ஒரு வார காலத்திற்குள் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/issue-regarding-the-ban-on-students-participating-in-protests-notice-issued-seeking-an-explanation




