டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் புதின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் புதின், “சில நேரங்களில் போட்டி என்பது மிகவும் மோசமாக மாறுகிறது. எரிபொருள் குழாய்கள் தகர்க்கப்படுவது, சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளை முடக்கிச் சரக்குக் கப்பல்களைக் கைப்பற்ற முயல்வது, சட்டவிரோதமான தடைகளை விதிப்பது போன்ற சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. புதின் - ட்ரம்ப்BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்? அச்சுறுத்தல் அதுமட்டுமின்றி, மற்றவர்களின் சுயநலத்தை ஏற்க மறுத்து, சொந்த நலனில் அக்கறை காட்டும் நாடுகளுக்கு எதிராக, ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ என்ற பெயரில் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. உலகின் அனைத்து நாடுகளின் மீது விதிக்கப்பட்ட மொத்தத் தடைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் ரஷ்யா மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சவாலான பின்னணியிலும், ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டுப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. நாங்கள் எங்களது தேசிய இறையாண்மையை மேலும் பலப்படுத்தியுள்ளோம். நம்பிக்கையான தோழமை நாடுகளுடன் உறவுகளை வளர்த்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி உலகச் சராசரியை விட மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது” என்று ட்ரம்பை மறைமுகமாக சாடுவதுபோலப் பேசினார். கூடவே, “கடந்த 5 ஆண்டுகளில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கை பிரிக்ஸ் நாடுகளே உருவாக்கியுள்ளன. ஆனால், ‘ஜி7’ (G7) அல்லது ‘க்ரேட் 7’ என அவர்களை ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நாடுகளின் பங்களிப்போ வெறும் 29 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. அதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பார்த்தோமேயானால், அதில் பாதியளவிற்கும் அதிகமான வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளே காரணமாக இருந்துள்ளன. அதேவேளையில் ஜி7 நாடுகளின் பங்களிப்பு வெறும் 18 சதவீதம் மட்டுமே. பிரிக்ஸ்Aurus Senat: மோடி பயணித்த புதின் கார்; குண்டுகள் துளைக்காது, கடலில் மூழ்காது - இன்னும் என்ன சிறப்பு? ஏன் இந்த நிலை? காரணம் மிகவும் எளிது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக பிரிக்ஸ் நாடுகளில்தான் வாழ்கிறார்கள். அதனால்தான், பிரிக்ஸ் நாடுகள் அளப்பரிய ஆற்றலும் துடிப்பும் கொண்ட உள்நாட்டுச் சந்தைகளைக் கொண்டுள்ளன” என்று பேசியிருக்கிறார். ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/putin-takes-swipe-at-g7-hails-brics-economic-power




