புதுடெல்லி, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஹாங்காங்குக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிர்தி மந்தனா 124 ரன்கள் (14 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்தார். மேலும் மூன்று வடிவங்கள் அடங்கிய ஒட்டுமொத்த பெண்கள் சர்வ தேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்தவரான இந்திய முன்னாள் கேப்டன் மிதாலிராஜியின் (333 ஆட்டத்தில் 10,868 ரன்) சாதனையை தகர்த்தார். மந்தனா இதுவரை 10,880 ரன் கள் (302 ஆட்டம்) எடுத்துள்ளார். ஆட்டநாயகி விருதை பெற்ற பிறகு 30 வயதான மந்தனா நிருபர்களிடம் கூறுகையில், 'நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது. அது என்ன சாதனை என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் துல்லியமான ரன்கள் எண்ணிக்கை அல்லது அது தொடர்பான புள்ளி விவரங்கள் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது திரும்பி பார்க்கும் போது இந் திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என சொல்வேன். மிதாலிராஜ் ஒரு ஜாம்பவான், ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் பேட்டிங் செய்வதை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்தோம். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்க ளுக்கு மேல் குவிப்பேன் என்றோ அதிக ரன் சாதனை பட்டியலில் மிதாலிராஜியை முந்து வேன் என்றோ ஒரு போதும் நினைத்ததில்லை. கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. ஆனால் அதிக ரன் குவிப்பில் டாப்-2 இடங்களில் இந்தியர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/i-never-even-imagined-i-would-break-mithalis-record-smriti-mandhana




