சென்னை, காவிரி படுகையில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியா நிறுவனம் தமிழகத்தின் கடலோர பகுதியில் உள்ள காவிரி படுகையில் CY-OS/90/1 என்ற பிளாக்கில் PY-3 என்ற எண்ணெய் பகுதியின் ஆபரேட்டராக ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தம் CY-OS/90/1 பிளாக் சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இவை அனைத்தும் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் பிஎஸ்சி எனப்படும் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 5 கிணறுகள் இந்நிலையில்,ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், PY-3 பகுதியில் தற்போது முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்குவதற்கு புதிதாக 5 கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். கடல்வழி குழாய்கள் இவற்றில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ கார்பன் கடல்வழி குழாய்கள் மூலம் FPSOக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுத்திகரிப்பு, சேகரிப்பு ஆகியவற்றை தொடர்ந்து கப்பல் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும். நிராகரிக்க வேண்டும் இந்த திட்டத்திற்காக புதிதாக எந்த ஒரு நிலத்தையும் கையகப்படுத்த வேண்டியது இல்லை. கடற்கரையோர வசதிகள் தேவைப்படாது” என்று குறிப்பிட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி படுகையில், ஹார்டி எக்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கேட்டுள்ள அனுமதியை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு உரிமம் தமிழ்நாட்டை ஒட்டிய கடலோர பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும் கூட மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு கடந்த காலத்தில் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலையே தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-not-approve-5-hydrocarbon-wells-vaiko




