நீட், க்யூட் தேர்வுகள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. நேற்று இந்தப் போராட்டத் தரப்பிற்கும், மத்திய அரசுக்கும் இடையே முதல் சந்திப்பு நடந்தது. காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் இருந்து இருவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கினர். தர்மேந்திர பிரதான்நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன? நீட், கியூட் தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால், அந்தத் துறை அமைச்சர் தான் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடப்பதால், தர்மேந்திர பிரதான் உடன் காக்ரோச் ஜனதா கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்த்த முடியாது தான். ஆனால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு குறிப்பாக ஜே.பி.நட்டாவை ஏன் தேர்ந்தெடுத்தது என்கிற கேள்வி இங்கே எழுகிறது. நீட் தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டாலும், அந்தத் தேர்வு நேரடியாக சுகாதார அமைச்சகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம்தான் (NMC) நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், குறைந்தபட்ச தகுதி அளவுகோல்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பான விதிகளைத் தீர்மானிக்கிறது. அதுமட்டுமின்றி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு, அகில இந்தியக் கோட்டா கலந்தாய்வு மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கும் சுகாதார அமைச்சகமே பொறுப்பாகும். இந்தக் காரணங்களால் தான், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஜே.பி.நட்டாவை டிக் செய்திருக்கிறது. cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா`இன்றுடன் உண்ணாவிரதத்தை முடிக்கிறாரா சோனம் வாங்சுக்?' - அவர் கூறும் 3 நிபந்தனைகள் என்ன? இருமுறை சந்திப்பு ஜே.பி.நட்டாவின் வீட்டில் தான் போராட்டக்காரர்களுடனான சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு ஒருமுறை அல்ல. இருமுறை நடந்துள்ளது. முதல் முறை பிரதிநிதிகள் எழுத்துபூர்வ கோரிக்கை கடிதம் இல்லாமல் வந்திருக்கின்றனர். அதனால், எழுத்துப்பூர்வ கடிதத்துடன் இரண்டாவது முறை நட்டாவை சந்தித்தனர். அந்தக் கோரிக்கை கடிதத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து எந்த உறுதியும் அளிக்காத நட்டா, போராட்டத்தை கைவிடுமாறு மட்டும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த அனைத்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது, நட்டா அமித் ஷாவிடம் சூழலை அப்டேட் செய்துகொண்டே தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அமித் ஷாவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/why-jp-nadda-led-centre-first-talks-on-neet-protest-explained



