திண்டுக்கல், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையச் சரகத்துக்குட்பட்ட இந்திராநகர் முருகபவனத்தில் வசித்து வரும் செல்வராஜ் மகன் அருண்குமார், கடந்த 30.08.2026 அன்று உசிலம்பட்டியில் நடைபெறும் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் செல்வதற்காக தயாரானார். அப்போது, மனைவி காரில் ஏறியதைத் தொடர்ந்து, குழந்தையை காருக்குள் உட்கார வைக்கும் போது தனது கையில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் இருந்த அட்டை பெட்டியை காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு மறந்துள்ளார். பின்னர் காரில் ஏறி பயணம் செய்துள்ளனர். நகைகள் மாயம் கார் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, நகைகள் இருந்த அட்டை பெட்டி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் விசாரணை திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்து அருண்குமார் சென்ற வழித்தடத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஒருவர் கைது சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில், பொன்மாந்துரை புதுப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த சவரியப்பன் மகன் குழந்தைராஜ் (54) என்பவர் 50 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் 30 பவுன் நகைகள் அடகு விசாரணையில், திருடிய நகைகளில் 30 பவுன் தங்க நகைகளை திண்டுக்கல்லில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்ததாக குழந்தைராஜ் ஒப்புக்கொண்டார். 50 பவுன் நகைகளும் மீட்பு வாக்குமூலத்தின் பேரில், திருடு போன 50 பவுன் தங்க நகைகளையும் தனிப்படையினர் மீட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/50-sovereigns-of-gold-jewelry-stolen-in-dindigul-one-person-arrested-police-recover-the-entire-haul




