கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 4ம் தேதி மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு பரிசு வாங்க கடைக்கு சென்றுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்து கொலை அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமியை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குளத்திற்கு அருகே வீசியுள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கும்பலில் ஒருவனை பொதுமக்களே அடித்துக்கொன்றனர். 3 பேர் கைது மேலும், தலைமறைவாக இருந்த அனந்த சர்தார், பிரபேஷ் மிண்டல், திபகர் சர்தார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிரபேஷ் மிண்டல் முக்கிய குற்றவாளி ஆவார். என்கவுன்டர் இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபேஷ் முண்டலை போலீசார் இன்று என்கவுன்டர் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபேசை இன்று நள்ளிரவு விசாரணைக்காக போலீசார் குற்றம் நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு பிரபேஷ் முண்டல் தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரபேஷ் முண்டல் உயிரிழந்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/key-accused-in-rape-murder-of-girl-in-west-bengal-killed-in-police-encounter




