சென்னை, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் கடுமையான பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் இன்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து அதிக அளவு பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கார்களிலும், இருசக்கர வாகனத்தில் ஏராளமானவர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் வருவதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் காலையில் இருந்து நீடிக்கிறது. பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தற்போது நீடித்து வருகிறது. இருசக்கர வாகனத்தில் வருவோர் கடுமையான வெயிலில் அவதிப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் வந்து அதிக அளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்து கொண்டிருப்பதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-holidays-people-from-chennai-are-migrating-to-their-hometowns-gst-road-is-in-trouble




