72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரிகளில் ஒருவராக (Feature Films) நடன இயக்குநர் கலா பங்காற்றியிருக்கிறார். நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவித்தப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். Raayan - 72nd National Awards செய்தியாளர்களிடையே கலா மாஸ்டர் பேசுகையில், "72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நான் ஒரு ஜூரியாக இருந்திருக்கிறேன் என்று சொல்லும்போதே பெருமையாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ஜூரியாக வந்திருக்கிறேன். இந்த முறை தமிழ் படங்களுக்கு நிறைய விருதுகள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! நடிகர் தனுஷின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சான்ஸே இல்லை! 'கேப்டன் மில்லர்' படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, எங்க நடுவர் குழுவில் இருந்த வட இந்திய ஜூரிஸே, 'இவருக்குக் கண்டிப்பாக ஒரு ஸ்பெஷல் அவார்டு கொடுத்தே ஆக வேண்டும்' என்று கூறினார்கள். எல்லோரும் விரும்பிச் சொன்னதால், நாங்கள் தனுஷிற்கு ஸ்பெஷல் அவார்டு கொடுத்துள்ளோம். 'ராயன்' திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ்த் திரைப்பட விருதும், அவரின் நடிப்புக்காகச் 'ஸ்பெஷல் ஜூரி அவார்டும்' கிடைத்திருக்கின்றன. தமிழ் படங்களில் 'மகாராஜா' திரைப்படம் பட்டியலில் இருந்தது. அதுபோகக் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' போன்ற படங்களும் வந்திருந்தன. உண்மையில் தேசிய விருதுத் தேர்வு என்பது இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டத்தில் (First level) ஒரு நடுவர் குழு படங்களைச் செலக்ட் செய்வார்கள், அவங்க பரிந்துரைத்த படங்களைத்தான் இரண்டாம் கட்டத்தில் (Second level) இருக்கும் நாங்க பார்த்து இறுதி செய்வோம். நிறைய நல்ல படங்கள் வந்திருந்தாலும், இங்கு நான் மட்டும் நடுவர் கிடையாது. எங்க குழுவில் கிட்டத்தட்ட 10 நடுவர்களும், ஒரு தலைவரும் இருக்கிறார்கள். இவ்வளவு பேரும் ஒன்றிணைந்து, விவாதித்துத்தான் ஒரு முடிவை எடுக்க முடியும். அதனால், தேர்வுக் குழுவில் இவர்கள் தப்பு செய்துவிட்டார்கள், அவர்கள் தப்பு செய்துவிட்டார்கள் என்று யார் மீதும் தவறு சொல்ல முடியாது. மிகவும் நேர்மையான முறையில் இறுதிப் பட்டியலில் இருக்கும் படங்களுக்குள் யாருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அதை அடிப்படையாக வைத்துத்தான் வெற்றியாளர்களை தேர்வு செய்வோம். 72nd National Awards Juries சிறந்த நடிகருக்கான பிரிவில் கடுமையான போட்டி இருந்ததால்தான், நாங்கள் தனுஷ் சாருக்கு இந்த ஸ்பெஷல் ஜூரி விருது அறிவித்துள்ளோம். 'பிரம்மயுகம்' படத்தில் மம்மூட்டி அசாத்தியமாக, தன் முழு உழைப்பையும் போட்டுக் கஷ்டப்பட்டு நடித்திருப்பார். வாக்கெடுப்பின் இறுதியில் மம்மூட்டி சாருக்குச் சற்று கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இருந்தாலும், தனுஷின் அசாத்தியமான நடிப்பை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை. 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் மிகச்சிறப்பாகப் பெர்ஃபார்ம் பண்ணியிருந்தார். தனுஷின் அந்த நடிப்புக்கு நான் 'ஹாட்ஸ் ஆஃப்' சொல்கிறேன். அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருந்தார். 'ராயன்' படத்திற்கும் சிறந்த படத்திற்கான விருது அறிவித்துள்ளோம். அவ்வளவு அழகாக அந்தப் படத்தை தனுஷ் இயக்கியிருந்தார்." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/72nd-national-awards-kala-master-dhanush-mammootty-competition




