சென்னை, தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஊழல் புகார்கள் சென்னை ஐகோர்ட்டில், ஜீவகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. லோக் ஆயுக்தா செயலாளராக, துணை செயலர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க வேண்டும். அரசாணை ஆனால், ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலராக நியமிக்கும் வகையில், விதிகளை திருத்தி 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது, மத்திய அரசு சட்டத்தை மீறிய செயல் என்பதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். லோக் ஆயுக்தா இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், "நீதிமன்றம் சார்ந்த பணிகளை, லோக் ஆயுக்தா மேற்கொள்வதால், நீதித்துறை பின்னணி கொண்ட நபர் செயலராக நியமிக்கப்படுவது, அதன் நிர்வாகத்துக்கு பயன் உள்ளதாக அமையும். மாவட்ட நீதிபதி பதவி, துணை செயலர் பதவியை விட மேலானவர். 2020-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து, 6 ஆண்டுகள் தாமதமாக தொடரப் பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "லோக் ஆயுக்தா செயலராக நீதிபதியை நியமிப்ப தற்கு, எந்த தடையும் இல்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-appointment-of-a-judge-as-lokayukta-secretary-dismissed




