சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். தண்டனை தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் மந்திரியை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நீட் தேர்வு குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-government-fall-if-dharmendra-pradhan-is-removed-p-shanmugam-questions-the-prime-minister




