திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு வாகன சேவையாக, மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 15-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை 5-வது நாளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் 6-ம் நாளில் அனுமந்த வாகன சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவை நடைபெற்றது. ஏழாம் நாள் சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று காலை ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்) வெகு விமரிசையாக நடைபெற்றது. 43 அடி உயரம், 47 டன் எடை கொண்ட பிரமாண்ட மரத்தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். கல்கி அவதார திருக்கோலம் நேற்று இரவு அஸ்வ வாகன சேவை (குதிரை வாகனம்) நடைபெற்றது. குதிரை வாகனம் மீது உற்சவர் மலையப்ப சுவாமி, கல்கி அவதார திருக்கோலத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கம்பீரமான யானைகள் முன்னால் செல்ல வாகன சேவை விமரிசையாக நடைபெற்றது. பக்திப் பாடல்கள், கோலாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் மங்கள இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுத்தும், 'கோவிந்தா. கோவிந்தா.' என்ற திருநாமத்தை முழங்கியபடியும் தரிசனம் செய்தனர். 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திரப் பிரம்மோற்சவ பெருவிழாவில், உற்சவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த நிகழ்வுடன் வாகன சேவைகள் நிறைவு பெற்றன. வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஸ்வ வாகன சேவை அஸ்வ வாகனம் உணர்த்தும் செய்தி உபநிடதங்கள், மனிதனின் புலன்களைக் குதிரைகளுக்கு ஒப்பிடுகின்றன. குதிரையின் மீது ஏறி பகவான் வீதிவலம் வருவதன் மூலம், புலன்களை ஆளும் கட்டுப்பாட்டாளர் தாமே என்பதை, இந்த வாகன சேவையின் வாயிலாக உணர்த்துகிறார். கிருஷ்ண யஜுர்வேதம், இறைவனை குதிரை வடிவமாகவே விவரிக்கிறது. குதிரை மீது 'கல்கி' அவதார திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளும் இந்த வாகன சேவையின் உட்பொருள் என்னவென்றால், பக்தர்கள் கலியுகத்தின் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விலகி, பகவானின் திருநாமத்தை உச்சரிப்பததன் (நாம சங்கீர்த்தனம்) மூலம் பகவானின் அருளைப் பெற வேண்டும் என்பதே ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/tirupati-tirumala-brahmotsavam-aswa-vahana-seva-was-held-in-a-grand-manner




