புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயியிடம் சர்வேயர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் உருமையா. இவர் தனது மனைவி பெயரில் உள்ள விவசாய இடத்தை பட்டாவில் உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அனுகியுள்ளார். லஞ்சம் அப்போது, வேலையை முடிக்க லஞ்சம் தருமாறு சர்வேயர் எழில்கொடி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே சர்வேயர் எழில்கொடிக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக உருமையா கொடுத்துள்ளார் இந்நிலையில், பட்டாவில் உட்பிரிவு வேலையை முடித்து தர கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தருமாறு சர்வேயர் எழில்கொடி லஞ்சம் கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. யாரையும் நம்ப முடியவில்லை என பேச்சு விவசாயி உருமையாவிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவில் சர்வேயர் எழில்கொடி பேசியதாவது;- சீக்கிரம் வேலை முடியாது. எவ்வளவு நாளில் வேலை முடியும் என்றும் தெரியாது. செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. நமது கையை கூட நம்மால் நம்ப முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்களோ கொடுங்கள். ரூ. 1,000 எல்லாம் போதாது. ரூ. 2,000 கொடுங்கள். எனக்கு ஜிபே கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம். ஜிபேயில் நான் யாருக்கு மாற்றுவது. யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமான காலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய சர்வேயர் உதவியாளர் மூலம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த உருமையா என்பவர் தனது மனைவி… — ஜெயராமன் திமுக (@jayaraman418) August 21, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone




