மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். துணைத்தலைவராக தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்திற்கு அமித்ஷா சென்றார். அமித்ஷா வருகை காரணமாக சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மண்டல கவுன்சில் கூட்டம்: மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது. கட்டமைப்பு மேம் பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல் வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படு கிறது.தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/home-minister-amit-shah-has-arrived-in-chennai




