தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்திய சக மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தல் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை, பள்ளி நூலக அறையில் வைத்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் (பிறப்புறுப்பில்) மிளகாய்ப் பொடியைத் தூவி சக மாணவர்கள் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். போலீசாரிடம் புகார் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மாதம் பாதிக்கப்பட்ட மாணவர் 7-ம் வகுப்பு பயின்று வந்த காலம் முதலே, இந்த மாணவர்கள் தொடர்ச்சியாக அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவித் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. 5 மாணவர்கள் கைது இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்தனர். 5 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு பின்னர், தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமம் முன்பாக அவர்களை ஆஜர்படுத்தி, செப்டம்பர் 1-ம் தேதி இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற 3 மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-harassed-by-sprinkling-chili-powder-on-his-private-parts-5-arrested




