மம்முட்டியின் 75வது பிறந்த நாளையொட்டி ‘ஓம்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், இதுவரை 'தனுஷ் 55' என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘ஓம்’ இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் அறிவிப்பு சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீம் மியூசிக் வெளியீடு சமீபத்தில் இப்படத்தின் தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்டுள்ளார். இந்த தீம் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளையொட்டி ‘ஓம்’ படத்தின்‘அலாக்கா லோவா’ என பெயரிடப்பட்ட முதல் பாடல் வெளியானது. இந்த நிலையில், மம்முட்டியின் 75வது பிறந்த நாளையொட்டி ‘ஓம்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மம்முட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு இப்படத்தில் பர்மா கார்த்திகேயன் என்கிற கடத்தல்காரராக மம்முட்டி நடிப்பதாக கிளிம்ஸ் வெளியிட்டுள்ளனர். ‘ஓம்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் மம்முட்டி இன்று 75-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்காக, சினிமாதுறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mammoottys-75th-birthday-om-film-team-glimpse-video-out




