கயானா, கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ட்ரின்பகோவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன கயானா அமேசான் வாரியர்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கயானா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கயானா வெற்றி இதையடுத்து களமிறங்கிய ட்ரின்பகோ 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜஸ்டின் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய கயானா வீரர் மெஹ்தி ஹசன் மிரஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-guyana-stun-trinbago




