பெங்களூரு, தனிமையில் உல்லாசம் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தை சேர்ந்தவர் ரகு கவாடே (வயது 40). இவரது மனைவி பங்காரி கவாடே. ரகு ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் ரகுவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் மனைவி பங்காரி மற்றும் உறவினர் ராம ராணா ஆகியோரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. கொன்று புதைப்பு இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ரகுவை தீர்த்துக்கட்ட பங்காரியும், ராம ராணாவும் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரகுவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தனர். இதையடுத்து பங்காரி, கணவர் ஆடு மேய்ப்பதற்காக வெளியூருக்கு சென்றிருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக ரகு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் லகமன்னா, இதுபற்றி சிக்கோடி போலீசில் புகார் அளித்தார். 2 பேர் கைது இதையடுத்து போலீசார் பங்காரியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், பங்காரியிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் ராம ராணாவுடன் சேர்ந்து கணவர் ரகுவை பங்காரி கொன்று உடலை தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பங்காரியையும், அவரது கள்ளக்காதலன் ராம ராணாவையும் கைது செய்தனர். பின்னர் ரகுவின் உடலை புதைத்த இடத்தையும் அவர்கள் போலீசாரிடம் அடையாளம் காட்டினர். பின்னர் போலீசார் ரகுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/goat-herder-killed-and-buried-wife-and-her-fake-lover-arrested




