சென்னை, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, 84 வயதில் 'போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய வழக்கு மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மண்ணில் தோண்டத் தோண்ட வரும் நீரூற்று போல, இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'தொழில் அதிபர் வீரமணியை பொறுத்தமட்டில் நீண்ட, நெடுங்காலமாக பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பான ஆதாரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகிறார்கள். போலீசாரை அதிர வைக்கும் வண்ணம் வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவரது பாலியல் வெறியாட்டம் உயர் அதிகாரிகளையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், யாரையும் விட்டு வைக்கக்கூடாது என்றும் முதல்-அமைச்சர் விஜய் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இதனால் போலீஸ் கமிஷனர் அமல்ராஜின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது. 5 தனிப்படையினர் இந்த விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. ரூ.70 கோடி வரை செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆதாரங்களை திரட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-surprise-raids-on-gem-veeramanis-residence-and-offices




