சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து நிரந்தர பணியாளர்களுக்கான இடமாறுதல்கள் மற்றும் பணியிட மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு (கவுன்சிலிங்) மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங்களில் 75 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு விரும்பிய இடத்தில பணி மாறுதல் வழங்க ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் ஜுலையில் விண்ணப்பங்கள் பெறப்படும். இருப்பினும் அரசியல் சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டுமே விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல்கள் வழங்கப்பட்டன. ஆன்லைன் கவுன்சிலிங் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இட மாறுதலில் வெளிப்படை தன்மை ஏற்படுத்த இந்த மாதம் முதல் ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதல்கள் வழங்கப்படுகிறது. இதற்கான இணைய தளத்தில் இடமாறுதல் பெற விரும்பும் மின்வாரிய ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். காலியிடங்களின் விவரங்கள் இணைய தளத்தில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் கேட்பவர்கள் கேட்கும் இடம், காலியிடம் என அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவாகும் என்பதால், விதிகளை மீறுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-employees-will-now-be-transferred-through-consultation




