ஏஐ துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றால் அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி மக்களை ஏஐ தொழில்நுட்பம் அழித்து விடும் என பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கற்பனை செய்ய முடியாத அளவு வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு என்னப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. மனிதர்களின் வேலையை மிகக் குறைந்த நேரத்தில் செய்து, நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது பெரிதும் பயன் இருந்தாலும் பல துறைகளில் வேலை இழப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. 100 கோடி பேரை கொல்லும் ஏஐ வரும் காலத்தில் மனிதர்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்த தொடங்கும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏஐ துறையில் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லையென்றால் அடுத்த சில ஆண்டுகளில் 100 கோடி மக்களை ஏஐ தொழில்நுட்பம் அழித்து விடும் என பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான விதிமுறைகள் தேவை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், “ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது. இதனால் அளப்பரிய பலன்கள் கிடைத்தாலும் ஆபத்தும் உள்ளது. தவறானவர்கள் கையில் ஏஐ தொழில்நுட்பம் சிக்கினால், அது 100 கோடி மக்களை கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மாறும்.மிகவும் சக்தி வாய்ந்த ஆபத்தான ஆயுதமாக ஏஐ மாறியுள்ளது. இதனால் வரும் ஆபத்துகளைத் தடுக்க ஏஐ நிறுவனங்களின் சுய கட்டுப்பாடு மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டு அரசும் இதில் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/ai-could-become-a-dangerous-weapon-capable-of-killing-a-billion-people-bill-gates-warns



