சென்னை, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை முதல் அமைச்சர் விஜய் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தவெக அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. வெற்றிப்பயணம் என்ற பெயரில் முதல் அமைச்சர் விஜய் திட்டத்தினை தொடங்கிவைத்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்த முதல் அமைச்சர் விஜய், பேருந்துகளுக்குள் சென்று பெண் பயணிகளுக்கு தன் கைப்பட டிக்கெட் கிழித்து கொடுத்தார். எதிர்பார்க்கவே இல்லை. பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் முதல் அமைச்சர் விஜய் டிக்கெட் கிழித்து கொடுத்தார். அப்போது மிகுந்த உற்சாகத்துடன் இருந்த பெண் பயணிகள், விஜய்க்கு கை கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் இது பற்றி பேசிய பெண் பயணிகள் கூறியதாவது; முதல் அமைச்சர் டிக்கெட் கிழித்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒவ்வொரு இருக்கையாக வந்து டிக்கெட் கிழித்து கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பயனுள்ளதாக இருக்கும் அவர் கிழித்து கொடுத்த டிக்கெட்டை லேமினேஷன் செய்து வைப்போம். விஜய் தொடங்கி வைத்துள்ள இந்த திட்டம் எங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கஷ்டபட்ட பெண்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தனர். நடத்துநருக்கு அறிவுறுத்தல் பேருந்தில் இருந்த சில ஆண் பயணிகளுக்கும் முதல் அமைச்சர் விஜய் டிக்கெட் வழங்கினார். ஆண் பயணிகளுக்கான டிக்கெட் செலவுக்காக நடத்துநரிடம் விஜய்யே ரூ.500 எடுத்து கொடுத்தார். அப்போது பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பேருந்து நிறுத்தத்தில் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் நடத்துனர் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-laminate-the-ticket-given-by-chief-minister-vijay-female-passengers-moved




